மரத்தில் கணித பாடங்கள்: மனனம் செய்ய புது முயற்சி

Added : நவ 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாகர்கோவில்: ஆசிரியைகள் எடுக்கும் கணித பாடம் மறக்காமல் இருக்க, நாகர்கோவில் நகர் கவிமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர், அதை காகிதத்தில் எழுதி, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தொங்க விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆசிரியைகள் நடத்தும் கணித பாடங்களின் சிரமமான பகுதிகளை பேப்பரில் எழுதி பள்ளி வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் மாணவியர் தொங்க விட்டு வருகின்றனர். பள்ளி
மரத்தில் கணித பாடங்கள்: மனனம் செய்ய புது முயற்சி

நாகர்கோவில்: ஆசிரியைகள் எடுக்கும் கணித பாடம் மறக்காமல் இருக்க, நாகர்கோவில் நகர் கவிமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர், அதை காகிதத்தில் எழுதி, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தொங்க விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆசிரியைகள் நடத்தும் கணித பாடங்களின் சிரமமான பகுதிகளை பேப்பரில் எழுதி பள்ளி வளாகத்தில் உள்ள மூங்கில் மரத்தில் மாணவியர் தொங்க விட்டு வருகின்றனர். பள்ளி இடைவேளை நேரங்களில் இந்த பகுதியில் வரும் மாணவியர், அதை பார்க்கும் போது, எழுதி தொங்க விட்ட பாடம் மனதில் பதிவதாக தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு மாணவியர் செய்த பின் மதிப்பெண்ணும் அதிகரித்ததால் ஆசிரியைகளும் அதை ஊக்குவிக்கின்றனர். இதனால் தினமும் புதிது புதிதாக கணக்கு குறிப்புகள் மரத்தில் தொங்குகின்றன. இதை பார்க்க இடைவேளை நேரத்தில் அதிக மாணவியர் கூட்டமும் வருகிறது.


கோவில்களில் மரத்தில் வேண்டுதலுக்காக தொட்டில், வேண்டுதல் கடிதங்கள் தொங்குவது போல திறமையை வளர்க்கவும், அதிக மதிப்பெண் பெறுவதற்காகவும் மாணவியர் எடுத்துள்ள இம்முயற்சி வித்தியாசமாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (4)

vbs manian - hyderabad,இந்தியா
29-நவ-202218:54:34 IST Report Abuse
vbs manian இந்த மாணவிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
29-நவ-202214:33:42 IST Report Abuse
S.Baliah Seer எந்த பாடமாயினும் எழுதி எழுதி பார்க்க வேண்டும்.MATHEMATICS மற்றும் CIRCUIT -போட்டு போட்டு பழக வேண்டும்.இதுதான் அதிக மதிப்பெண் மற்றும் வெற்றியின் ரகசியம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
29-நவ-202214:27:57 IST Report Abuse
S.Baliah Seer மனப்பாடம் செய்ய நிறைய திறமையும் பொறுமையும் வேண்டும். அப்படி செய்யும்போது படித்தவை பெருமூளையின் LONG TERM MEMORY-யில் நிறுத்தப்படுகிறது.அவை ஒருபோதும் மறக்காது.இந்த திறமையில்லாத பலர் அவன் கடம் போடுவான், பரீட்சையில் கக்குவான், மற்றபடி இன்டெலிஜென்ஸ் இருக்காது என்று சொல்லித் திரிவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X