டி.வி.ஆர்., பெயரில் இதழியலாளர் விருது: தமிழ் சங்கம் கோரிக்கை

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை அறிவித்ததற்காக, சென்னை மாநகர தமிழ் சங்க தலைவர் பாரதி சுகுமாரன், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும்
TVR, dinamalar, TV Ramasubbaiyer, Ramasubbaiyer

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை அறிவித்ததற்காக, சென்னை மாநகர தமிழ் சங்க தலைவர் பாரதி சுகுமாரன், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளை, மீண்டும் வழங்க முன் வந்ததற்கு, தமிழ் அமைப்புகள் சார்பில், முதல்வருக்கு நன்றி. பல்வேறு அறிஞர்கள், ஆளுமைகள் பெயரில் விருதுகள் வழங்கி வரும் அரசு, குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க காரணமாக இருந்தவரும், இதழியல் துறையில் தனி முத்திரை பதித்தவருமான, 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், ஆண்டுதோறும் சிறந்த இதழியலாளர்களுக்கு விருது வழங்க வேண்டும்.


latest tamil news

திரைப்படப் பாடல்கள் வழியே, பாமர மக்களிடமும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய, பட்டுக்கோட்டையார் பெயரில், பாடலாசிரியர்களுக்கு விருது வழங்க வேண்டும். அரசின் உயரிய இலக்கிய விருதாளர்களுக்கு, கனவு இல்லம் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்த அறிவிப்பை, முறையாக அமல்படுத்த வேண்டும்.


தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழியாக, திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் பெயர்களிலான உயரிய இலக்கிய விருதுகள் பெற்ற அனைவருக்கும், முதல்வரின் கனவு இல்ல திட்டத்தை விரிவுபடுத்தி, அவர்களையும் பெருமைப்படுத்த வேண்டும். இவ்வாறு பாரதிசுகுமாறன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

29-நவ-202221:19:28 IST Report Abuse
வேதவல்லி மகிழ்ச்சிக் குரிய விருதுகள் நினைவாகட்டும் கனவு இல்லம் தினமலர் சார்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202213:53:32 IST Report Abuse
vpurushothaman நல்ல யோசனை. அமரர் டி.வீ.ஆர். பெயரில் இதழியியலாளர் விருது வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
29-நவ-202213:31:52 IST Report Abuse
jayvee ராமசாமியின் திருவிளையாடலில் மாநில இணைப்பு என்பது கேள்விக்குறியானது.. சென்னை ஆந்திராவிற்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.. பெங்களூரை தமிழகத்தில் இணைக்கவேண்டும் என்று ராஜாஜி கூற, அப்படி என்றால் கிருஷ்ணகிரி கர்நாடகாவுக்கு என்று கூறியவர் ராமசாமி ..உண்டவீட்டிற்கு ரெண்டகம் .. இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்தி இவரால் தமிழகத்திற்கு இன்றளவும் தீராத பிரச்சனை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X