ரூ.360 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கீழக்கரையில் திமுக கவுன்சிலர் கைது

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (81) | |
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான, 'கோகைன்' போதைப் பொருளை, கடற்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபம் - வேதாளை சாலையில், நேற்று முன்தினம் இரவு, கடற்படை போலீசார் தீவிர கண்காணிப்பில்
DMK, arrest, திமுக,போதைப்பொருள்,கீழக்கரை,திமுக கவுன்சிலர், கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான, 'கோகைன்' போதைப் பொருளை, கடற்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர்.


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபம் - வேதாளை சாலையில், நேற்று முன்தினம் இரவு, கடற்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.போலீசார் சோதனை:


வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அதில், 20 லிட்டர், 30 கேன்களில், கோகைன் போதைப் பொருளுக்கான மூலப்பொருட்கள், 360 கிலோ இருந்தன.இந்த போதைப் பொருளை, வேதாளை சாதிக் அலி, 36, என்பவரின் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிந்தது.


அந்த போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, காரில் இருந்த சகோதரர்களான, கீழக்கரை நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன், 45, தற்போதைய, 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், 42, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 360 கோடி ரூபாய். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை, இலங்கைக்கு கடத்த முயன்று, போலீசார் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை.


latest tamil news


மீனவர்கள் அதிர்ச்சி:


கடத்தல் சகோதரர்களான தி.மு.க.,வினருக்கு, சென்னை டு ராமநாதபுரம் சரக்கு லாரி சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல், 'மாபியா' கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என, மத்திய -மாநில உளவு போலீசார் விசாரித்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை, மீனவர்கள் போர்வையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்றது, அப்பாவி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதனால், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என, அப்பாவி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (81)

W W - TRZ,இந்தியா
30-நவ-202211:58:11 IST Report Abuse
W W V. V .IP கள் கடத்தலில் மஸ்தான்கள் Green Card Holder பிடி பட்டது அதிசியம் ஆனல் உண்மை இதன் பின் பலத்தில் உள்ள அனைவரையும் பிடித்து அரபு ராஜ்ஜியதில் என்ன தண்டனையோ அதனை அவர்களுக்கு வழங்கி கெளவறிக்க பட வேண்டும்.
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
30-நவ-202210:00:39 IST Report Abuse
 Ganapathy Subramanian நேற்றைய செய்தி - இதுவெல்லாம் இலங்கைக்கு கடத்தவிருந்த உரங்களுக்கான மூலப்பொருள்கள். இன்றைக்கு இவையெல்லாம் போதைப்பொருளுக்கான மூலப்பொருள்கள். விடியா அரசாங்கத்தில் போலீஸ் சொல்லும் கட்டுக்கதைகள் மிக அதிகமாக இருக்கின்றன. கோவை தீவிரவாத தாக்குதல் சிலிண்டர் வெடிப்பு என்று உருமாற்றம் பெற்றாற்போல் இருக்கிறது இந்த கதையும்.
Rate this:
Cancel
30-நவ-202204:43:38 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பிடிபட்டது கோகையின் தயாரிக்க மூலபொருள் என்றால், சுத்தமான கோகையின் தயாரிக்கும் 🏭 தொழிற்சாலை கீழக்கரையில் எங்க இருக்கு. NIA விசாரணை நடத்த வேண்டும். 😜. திமுகவின் தமிழக 🚨 நம்ப முடியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X