கடைசி மேட்டரை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி..
''வருஷா வருஷம் டில்லியில நடக்கிற குடியரசு தின அணிவகுப்புல, மாநிலங்கள் வாரியா அலங்கார ஊர்திகள் இடம்பெறும்... இந்த வருஷம் ஜனவரி 26ல நடந்த அணிவகுப்புல, தமிழக ஊர்திக்கு இடம் கிடைக்காம, பெரிய சர்ச்சையானதுங்க...
''இப்ப, வர்ற ஜனவரியில நடக்கிற அணிவகுப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம், டில்லியில போன 24ம் தேதி நடந்துச்சு... தமிழகம் சார்புல செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன் தலைமையில கூடுதல் இயக்குனர்கள், டிசைனர் எல்லாம் கலந்துக்கிட்டாங்க... நம்ம ஊர் சார்புல, சிறுதானியங்களின் பயன்களை விளக்குற அலங்கார ஊர்திக்கான டிசைன்களை குடுத்தாங்க...
''ஆனா, அதை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் நிராகரிச்சிட்டாங்க... அதுக்கு பதிலா, 'தொழில் துறை சாதனைகளை விளக்கும் டிசைனை உருவாக்கிட்டு, அடுத்த வாரம் வாங்க'ன்னுசொல்லிட்டாங்க...
''இயக்குனர் ஜெயசீலனிடம் அரசு கேபிள் 'டிவி' பொறுப்பும் கூடுதலா இருக்கிறதால, அடுத்த கூட்டத்துக்கு கூடுதல் இயக்குனர்களை போக சொல்லியிருக்கார்... அவங்களோ, 'நாங்க மட்டும் போய், டில்லி அதிகாரிகள் ஏதாவது கட்டையை குடுத்துட்டா, வம்பா போயிடும்'னு தலைமை செயலர் மற்றும் முதல்வர் அலுவலகசெயலர்களிடம்சொல்லிட்டாங்க...
''அவங்களோ, இயக்குனரை கண்டிப்பா போக சொல்லிட்டாங்க... இதனால, செய்தி துறைக்குள்ள பனிப்போர் ஓடிட்டு இருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.
Advertisement