மீனாட்சி கோவிலில் முதலுதவி சிகிச்சை மையம்: வெளியே அமைப்பது குறித்து நிர்வாகம் பரிசீலனை

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க இருந்த திட்டத்தை மாற்றி, கோவிலுக்கு வெளியே அமைப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மேற்கு ஆடி வீதியில் ஓதுவார் பள்ளி அருகே முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க இருந்த திட்டத்தை மாற்றி, கோவிலுக்கு வெளியே அமைப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மேற்கு ஆடி வீதியில் ஓதுவார் பள்ளி அருகே முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.



latest tamil news


ஆகமவிதி மீறல்


இங்கு பக்தர்களுக்கு ரத்த பரிசோதனை, காயம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கோவிலில் மனித ரத்தம் படக்கூடாது என்பது ஆகமவிதி. அப்படி படும் பட்சத்தில் பரிகாரம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து, நிர்வாகம் பட்டர்களிடம் ஆலோசிக்காமல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் ஆடி வீதியில் முதலுதவி மையத்தை அமைத்தது. ரத்தப் பரிசோதனை செய்யும் போதோ, காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் போதோ தரையில் ரத்தம் படும். அப்படி நடந்தால் ஆகமவிதியை மீறுவதாகும்.


latest tamil news


சித்திரை வீதி


இதுகுறித்து, நம் நாளிதழ் செய்தி வெளியிட்டது. கோவிலுக்கு வெளியே சித்திரை வீதியில் உள்ள கோவில் கட்டடங்களில் ஏதாவது ஒன்றில் முதலுதவி மையத்தை அமைக்க வேண்டும் என, சுட்டிக் காட்டப்பட்டது. இதே கருத்தை ஹிந்து அமைப்புகளும் வலியுறுத்தின. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலுக்கு வெளியே முதலுதவி மையம் அமைக்க, கோவில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

Manguni - bangalore,இந்தியா
29-நவ-202214:24:48 IST Report Abuse
Manguni திராவிடம் அடியோடு வேரோடு அழிய வேண்டும் சிவபெருமானே அன்னை மீனாட்சி
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
29-நவ-202214:02:35 IST Report Abuse
ram இவனுக நிர்வாகம் சந்தி சிரிக்குது. ஹிந்து கோவில்களை அந்த அந்த ஊரின் மக்களின் நன் மதிப்பை பெற்றவரிடம் அல்லது மடாதிபதிகளிடம் ஒப்படைக்கலாம். திருட்டு திராவிடம் ஆட்சி வந்த பிறகுதான் கோவில் சிலைகள், சொத்துக்கள் கொள்ளை போயின, பழனி கோவிலில் போகர் செய்த சிலையை கூண்டில் வைத்து இருக்கிறார்கள். ஹிந்து அறநிலை துறை அமைச்சர், ஹிந்து கடவுள்கள் இல்லை என்று கூறி கொண்டு அலையும் நபர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அப்புறம் எப்படி ஹிந்து கோவில்கள் நன்றாக நடக்கும், இப்படித்தான் இருக்கும், சந்தோசபடணும், இவர்கள் டாஸ்மாக் கடை உள்ளே திறக்கவில்லையென்று...
Rate this:
Cancel
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
29-நவ-202209:41:23 IST Report Abuse
NALAM VIRUMBI அடிப்படை அறிவு கூட இல்லாமல் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதுவும் உலக பிரசித்தி பெற்ற மீனாக்ஷி அம்மன் கோவிலில். அம்மை அப்பனுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X