கோவில்களின் பழமையை பாதுகாக்க பெருந்திட்டம் தயாரிக்க அறிவுரை

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: -பக்தர்களின் வசதிக்காகவும், கோவில்களின் பழமை, பாரம்பரியம், கட்டடக்கலை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையிலும், பெருந்திட்டம் தயாரிக்க, கோவில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்

சென்னை: -பக்தர்களின் வசதிக்காகவும், கோவில்களின் பழமை, பாரம்பரியம், கட்டடக்கலை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையிலும், பெருந்திட்டம் தயாரிக்க, கோவில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
latest tamil news

அதன் அடிப்படையில், கோவில்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இணை, துணை, உதவி கமிஷனர், செயல் அலுவலருக்கு கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:


lகோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கருதி, குடிநீர்,

கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பராமரிக்க, செயல்

திட்டம் வகுக்க வேண்டும்


lபக்தர்களுக்கு, வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். கோவிலின், கோபுரத்தின் அழகை சிதைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும்சுவர் மற்றும் தரைகள், பழமை மாறாமல் புனரமைக்கப்பட வேண்டும். போதுமான கைப்பிடி கம்பிகள், பித்தளை கைப்பிடிகளையும் நிறுவலாம். தொல்லியல் வல்லுனர்கள் பரிந்துரைப்படி, கற்கள் மீது பூசப்பட்ட வர்ணங்கள் அகற்றப்பட வேண்டும்கோவில்களில் இயற்கை பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். கோவில் அலுவலகம் அந்த கோவிலின் தனி கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பை

ஒத்திருக்க வேண்டும்கோவில் நந்தவனத்தை முறையாக பராமரித்து, பசுமையாக்க வேண்டும்.

கோவிலில் பயனற்ற கழிவுகளை அகற்ற வேண்டும். அறநிலையத்துறை விதிகள்,

அறிவுரைப்படி நன்கொடையாளர் பணிகள் நிகழ்த்த வேண்டும்


latest tamil news


திருத்தேர், வாயில் கதவுகள் அந்தந்த கோவில் பாரம்பரியத்திற்கு ஏற்ப நிறுவப்பட வேண்டும். சுவரொட்டிகள், பதாகைகள், அழகு பொருட்கள் ஆகியவை, உடனடியாக அகற்றப்பட வேண்டும்கோவில்களில் பெருகி வரும் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளை, முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற காரணங்களுக்காக, அந்தந்த கோவில் நிர்வாகம் பெருந்திட்டம் தயாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

V.Rajamohan -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-202219:22:23 IST Report Abuse
V.Rajamohan இவர் நேற்று வரைக்கும் கோமாவில் இருந்தாரா? திடீரென்று முழித்துக் கொண்டு பல விஷயங்களை பேசுகிறார்... செத்துப்போன கருணாநிதியின் பேனா நினைவுச் சின்ன நிதியில் இருந்து செய்யப் போகிறாரா..? அல்லது கோவில் வருமானத்தில் கை வைக்கத் திட்டமா..?
Rate this:
Cancel
V.Rajamohan -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-202219:22:23 IST Report Abuse
V.Rajamohan இவர் நேற்று வரைக்கும் கோமாவில் இருந்தாரா? திடீரென்று முழித்துக் கொண்டு பல விஷயங்களை பேசுகிறார்... கோவில் வருமானத்தில் கை வைக்கத் திட்டமா..?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
29-நவ-202218:39:01 IST Report Abuse
vbs manian பூமிக்கு அடியில் தோண்டி இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை பார்த்து பெருமை. பூமிக்கு மேல் எல்லோர் கண் எதிரிலும் நூற்றுக்கணக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் சிதைந்து கிடக்கின்றன. சிலைகள் களவாடப்பட்டு வெளிநாட்டு ம்யூசியங்களில் உள்ளன. இந்த கோவில்களை மீட்டு எடுத்து தமிழக கலை பெருமையை நிலை நிறுத்த எந்த முயற்சியும் இல்லை. மாறாக இருக்கும் கோவில்களும் இடித்து தள்ளுகிறார்கள். மெக்ஸிகோ கிரீஸ் கம்போடியா போன்ற நாடுகளில் பழமையான கோவில்கள் குகைகள் வானுயர கட்டமைப்புகளை புனர் நிர்மாணம் செய்து போற்றி பாதுகாக்கிறார்கள். உலகமே வியக்கிறது. நம் கோவில்கள் யாவும் கலை அழகு சொட்டும் பொக்கிஷம். மீட்டு எடுத்தால் உலக அளவில் பெருமை வெளி நாடு டூரிசம் என்று கொண்டாடலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X