வாட்ஸ்-அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்காக புதிதாக 1:1 என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வபோது புது புது அப்டேட்களை வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது 1:1 சாட் அம்சத்தை (1:1 Chat Feature) வாட்ஸப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) என்கிற அம்சம் ஆகும்.
![]()
|
இந்த அம்சத்தின் மூலம் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு நீங்களே சில குறிப்புகளை (Notes), நினைவூட்டல்களுக்கு (Reminders), பொருட்களை வாங்கும் முன் ஷாப்பிங் பட்டியல்களை (Shopping List) அல்லது மற்ற விவரங்களை டெக்ஸ்ட் மெசேஜ் வடிவில் (Text Message Format) அனுப்பி கொள்ள விரும்பினால், இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
![]()
|
அதுபோக, மெசேஜ் யுவர்செல்ஃப் என்கிற அம்சத்தின் கீழ் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமின்றி - உங்களுக்கு நீங்களே - புகைப்படங்கள் (Photos), வீடியோக்கள் (Videos) மற்றும் ஆடியோவை (Audio) கூட ஷேர் செய்து கொள்ளலாம். இதனை மிகவும் எளிதாக கையாளமுடியும். எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்...
முதலில் உங்களுடைய கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்-ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட் வெர்ஷன் உள்ளதா என்று சரிபார்க்கவும்; இல்லையென்றால் வரும் வாரங்களில் அனைத்து அப்டேட்கள் வழங்கப்படும் அதன்பின் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்.
பின்னர் வாட்ஸ்அப்பை திறந்து, காண்டாக்ட்ஸ்-க்கு (Contacts) சென்றால் அங்கே உங்களின் சொந்த வாட்ஸ்அப் நம்பர் (Own WhatsApp Number) இருக்கும்.
![]()
|
அதன் கீழ் "மெசேஜ் யுவர் செல்ஃப்" என்கிற டேக்லைன் இருக்கும். - அதை கிளிக் செய்யவும்; பின்னர் ஒரு புத்தம் புதிய சாட் விண்டோ (Chat Window) ஓப்பன் ஆகும்.
அதன் வழியாக உங்களுடன் நீங்களே சாட் செய்துகொள்ளலாம். அதாவது நீங்கள் எதை அனுப்பினாலும் அது உங்களுக்கான ஒரு உடனடி மெசேஜ் ஆக வந்து சேரும் மற்றும் அதற்கு உடனடி ப்ளூ டிக்ஸ்களும் (Blue Ticks) கிடைக்கும்.