அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண அரசு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஓர் பரிசீலனை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ராணுவ ரோபோ பயன்பாடு குறித்த இந்த உத்தரவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![]()
|
ரோபாட்டிக்ஸ் துறை நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டுவருகிறது. ரோபோக்கள் மூலம் பல வேலைகள் சுலபமாகி வருகின்றன. ஹியூமனாடு ரோபோக்கள் துவங்கி பலவித வடிவங்களில் பல ஆட்டோமேஷன் பணிகளுக்கு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரோபோக்கள் மனிதர்களின் வேலைக்காரர்களாக இருந்த காலம்போய், தற்போது வயதானவர்களின் உற்ற தோழனாகவும் பெண்களின் பாதுகாவலனாகவும் மாறி வருகின்றன.
இதனைத்தொடர்ந்து ரோபோக்களை காவல்துறையில் சேர்க்க பல நாட்டு அரசுகள் பரிசீலித்து வருகின்றன. ரோபோக்கள் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பலவித பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண அரசு ஓர் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சான்பிரான்ஸிஸ்கோ காவல்துறையின் வசம் தற்போது 12 ரோபோக்கள் உள்ளன. இவற்றை ரிமோட் கொண்டு கட்டுப்படுத்த முடியும். நடைபாதை கண்காணிப்புக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. குற்றச்சம்பவங்கள் குறித்து போலீஸாரிடம் தகவல் தெரிவிப்பதே இவற்றின் முக்கியப் பணி. வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய இந்த ரோபோக்களுக்கு புரோக்ராமிங் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இவை தற்கொலைப் படைகளாகவோ அல்லது மனிதர்களைத் தாக்கும் ஆயுதமாகவோ பயன்படுத்தப்படவில்லை.
![]()
|
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டல்லாஸ் காவல்துறை, 5 போலீஸாரை சுட்டுக்கொன்ற குற்றவாளி ஒருவனைக் கொல்ல வெடிகுண்டு பொருத்திய ரோபோ ஒன்றை தற்கொலை ரோபோவாகப் பயன்படுத்தியது. இந்த தாக்குதலில் குற்றவாளியுடன் ரோபோவும் சுக்குநூறாக உடைந்து சாம்பலானது.
ஆனால் இதுபோல ரோபோக்களை தற்கொலைப் படைகளாகவோ அல்லது மனிதர்களைத் தாக்கும் பாதுகாப்புப் படைகளாகவோ பயன்படுத்துவது ஆபத்தானது என ரோபாடிக்ஸ் விஞ்ஞானிகள் சிலர் எச்சரித்து வருகின்றனர். இந்த ரோபோக்களின் புரோக்ராமில் தவறு ஏற்பட்டால் இதனால் காவலர்கள் உயிருக்கே பாதிப்பு உண்டாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மிலிட்டரி தரத்திலான ரோபோக்கள் குறித்த விவரங்களை லோக்கல் அமலாக்க ஏஜன்ஸியிடம் சமர்ப்பிக்க அம்மாகாண காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை மூர்கமாகத் தாக்கும் ரோபோவை காவல்துறையில் அனுமதிக்கலாமா வேண்டாமா என மாகாண அரசு பரிசீலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement