பாத யாத்திரையால் பொறுமை வந்துள்ளது: ராகுல்

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
இந்தூர்: '' பாத யாத்திரை மேற்கொள்வதால், பொறுமையாக இருக்கும் குணம் வந்துள்ளது'', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.கடந்த செப்.,7ல் கன்னியாகுமரியில் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாதயாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா என 2 ஆயிரம் கி.மீ., தூரம் கடந்து நேற்று முன்தினம்(நவ.,27) ம.பி.,மாநிலம் இந்தூரை
rahul, rahulgandhi, congress, Bharat Jodo Yatra, congress mp rahul, congress mp rahul gandhi, ராகுல், ராகுல் காந்தி, காங்கிரஸ், பாரத்ஜோடோ யாத்திரை, எம்பி ராகுல், பொறுமை

இந்தூர்: '' பாத யாத்திரை மேற்கொள்வதால், பொறுமையாக இருக்கும் குணம் வந்துள்ளது'', என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.


கடந்த செப்.,7ல் கன்னியாகுமரியில் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாதயாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா என 2 ஆயிரம் கி.மீ., தூரம் கடந்து நேற்று முன்தினம்(நவ.,27) ம.பி.,மாநிலம் இந்தூரை வந்தடைந்தது.


இச்சூழ்நிலையில் இந்தூரில், நிருபர்களை சந்தித்த ராகுலிடம், இந்த பாதயாத்திரையால் கிடைத்த திருப்தியான தருணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


latest tamil news


இதற்கு ராகுல் அளித்த பதில்: பல விஷயங்கள் இருந்தாலும், பொறுமை உள்ளிட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முன்பு யாராவது என்னை தூண்டிவிட்டாலும், தள்ளிவிட்டாலும் 2 மணி நேரத்திலேயே கோபப்பட்டு விடுவேன். ஆனால், தற்போது 8 மணி நேரம் கடந்தாலும் கோபம் வருவது கிடையாது. அது என்னை பாதிக்கவில்லை. பாதயாத்திரையில் நடக்கும் போது, அதில் ஏற்படும் வலி மற்றும் அதனை அனுபவிக்கும் போது, எதையும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.


அடுத்ததாக, முன்பை விட மற்றவர்களின் கருத்துகளை கேட்பது அதிகரித்துள்ளது. ஒருவர் வந்து என்னை சந்தித்து அவரது கருத்தை கூறும் போது, அதை கூர்ந்து கவனிக்கிறேன். இவை அனைத்தும் எனக்கு அதிகளவு பலன்களை தருகிறது.


பாதயாத்திரையை துவக்கிய போது, காலில் முன்பு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக வலி ஏற்பட்டது. இதனால், நிறைய அசவுகரியமும் உருவானது. இதுபோன்ற சூழ்நிலையில் பாத யாத்திரையில் தொடர்ந்து நடக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தொடர்ந்து நடக்க துவங்கிய போது, அந்த பயத்தை எதிர்கொண்டதுடன், நடக்க முடியுமா என்ற கேள்வியை இல்லாமல் போக செய்தேன்.


latest tamil news


தென் மாநிலம் ஒன்றில், வலியால் அவதிப்பட்ட நேரத்தில் 6 வயதான சிறுமி ஒருவர் வந்து என்னிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். அவர் சென்ற பிறகு அந்த கடிதத்தை படித்த போது, அதில் '' நீங்கள் தனியாக நடப்பதாக நினைக்க வேண்டாம். நானும் உங்களுடன் நடக்கிறேன். ஆனால், நடந்து செல்ல எனது பெற்றோர் அனுமதிக்கவில்லை. ஆனால் உங்களுடன் இணைந்து நடக்கிறேன்'' எனக்கூறியிருந்தார். இது போல் ஆயிரக்கணக்கான உதாரணங்களை என்னால் பகிர முடியும். ஆனால், இந்த நிகழ்வு தான் முதலில் என் மனதில் தோன்றியது. இவ்வாறு ராகுல் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (28)

Raja Sekar -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202207:12:26 IST Report Abuse
Raja Sekar 0 ....
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
30-நவ-202205:35:45 IST Report Abuse
sankar பாதயாத்திரை போனால் ஒட்டு வரவில்லை பொறுமை வந்துள்ளது பொறுமையா காத்திருங்க மோடி இன்னும் நிறைய நல்லது நாட்டுக்கு செய்ய வேண்டி இருக்கு
Rate this:
Cancel
30-நவ-202204:34:43 IST Report Abuse
பேசும் தமிழன் பாதயாத்திரையா ......இல்லை .....கேரவன் யாத்திரையா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X