சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம்: டிச.,1ல் அறிமுகம்

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நாம் தினசரி பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது. காகித பணத்திற்கு
Digital Rupee, RBI, Reserve Bank, Launch, December 1, டிஜிட்டல் ரூபாய், டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் நாணயம், ரிசர்வ் வங்கி, ஆர்பிஐ, டிசம்பர் 1, அறிமுகம்

புதுடில்லி: சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நாம் தினசரி பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் வடிவிலும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. இதே போல டிஜிட்டல் கோட்கள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவது டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சி என்று கூறப்படுகிறது. காகித பணத்திற்கு சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படும்.


இந்த நிலையில் சில்லரை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் நாணயம் டிசம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) அறிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் நாணயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.latest tamil news

முதல்கட்டமாக மும்பை, டில்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தமுறை பரிவர்த்தனையில் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணைய உள்ளன.


தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள், கரன்சிகள் மதிப்பில் டிஜிட்டல் நாணயம் இருக்கும் எனவும், டிஜிட்டல் டோக்கன் வடிவில் டிஜிட்டல் நாணயம் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (4)

ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
29-நவ-202221:08:29 IST Report Abuse
ديفيد رافائيل எந்தவொரு additional transaction charges பண்ணாம இருந்தா போதும் future ல........ (நான் இத ரொம்ப நாள் முன்பே எதிர் பார்த்தேன், users அதிகமான பிறகு transaction charges பண்ணாம இருந்தா போதும்)
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-நவ-202219:13:46 IST Report Abuse
அசோக்ராஜ் சில வருடங்களில் பேப்பர் கரன்ஸி பிரிண்டிங் 90 சதம் குறைத்து விடுவார்கள். அது மார்க்கெட்டிங் பிரீமியத்துக்கு விற்கப்படும்
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் இதோ வந்திருச்சில்ல! டிஜிட்டல் !!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X