ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஒய்ந்தது. வரும் 1-ம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு டிச.1 மற்றும் டிச.5 ஆகிய இரு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்ததேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. வரும் 1-ம் தேதி முதல் கட்ட ஒட்டுப்பதிவு நடக்கவிருப்பதையொட்டி இன்றுடன் பிரசாரம் ஒய்ந்தது.
குஜராத் தேர்தல் கமிஷனர் பாரதி கூறியது, டிச 1-ம் தேதி 19 மாவட்டங்களில் உள்ள 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 பேர் ஒட்டளிக்கின்றனர். தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஒய்ந்தது. வரும் 1-ம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது