நெல்லை மாநகராட்சி 37 வது வார்டில் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து முறைகேடு இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் தலைமையில் மண்டல அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மண்டல அலுவலகம் நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மண்டல உதவி ஆணையரிடம் ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.