கயத்தாறு அருகே வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் மணிகண்டன்(38) விவசாயி. இவரது விளைநிலம் வழியாக தனியார் நிறுவனம் டவர் அமைத்து மின்வயர் செல்கிறது.இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி டவர் மீது ஏறி நின்று மணிகண்டன் போராட்டம் நடத்தினார். தாசில்தார் சுப்புலெட்சுமி மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் அந்தோணி திலிப் ஆகியோர் பேசி கீழே இறங்கிவரச்செய்து, தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.