
யுத் அபியாஸ்
இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சிக்கு வழங்கப்பட்ட பெயர்
பதினைந்து நாட்கள் குளிரான மலைப்பகுதியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் இரு நாட்டு படைவீரர்களும் தங்களது நவீன தொழில் நுட்பத்தை பரிமாறிக் கொள்கின்றனர்.
போர்ப் பயிற்சி மட்டுமின்றி பேரிடர் கால மீட்பு பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் அவுலியில் இந்த பயிற்சி முகாம் இன்று துவங்கியது.

இந்த பயிற்சி களத்தில் முதல் முறையாக சந்தேகத்திற்கு இடம் தரக்கூடிய ‛டிரோன்' எனப்படும் ஆளில்லாத விமானங்களின் ஊடுரூவலை தடுப்பதற்காக கழுகு மற்றும் நாய் பயன்படுத்தப்படுகிறது.

வானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதேனும் பறந்தால் உடனே நாய் குரைக்கிறது, அதே நேரம் பயிற்சி தரப்பட்ட சிறிய ரக கேமிரா பொருத்தப்பட்ட அர்ஜீன் என்ற கழுகு அந்த ட்ரோனை நெருங்கிச் சென்று படம் எடுத்து அனுப்புகிறது இதன் காரணமாக அந்த ட்ரோனை எளிதில் வீழ்த்த முடிகிறது

பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியப் பகுதிகளுக்கு எல்லையைத் தாண்டி வரும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைச் சமாளிக்க நமது பாதுகாப்புப் படையினருக்கு இந்த பயிற்சி பெரிதும் உதவும் என்கின்றனர்.
-எல்.முருகராஜ்