மயிலாடுதுறை:பொறையாரில் மனைவி இறந்த துக்கத்தில் ஒய்வு பெற்ற ஆசிரியரான கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு சிவன் கோவில் கீழவீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சொக்கலிங்கம்.84. இவரது மனைவி சரோஜினி.68. உடல்நிலை குறைவு காரணமாக சரோஜினி கடந்த 27ம் தேதி இறந்தார். இவரது உடல் நேற்று முன் தினம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவரது கணவர் சொக்கலிங்கம் துக்கம் தாங்காமல் அழுது கொண்டு சோகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொக்கலிங்கத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வழியில் சொக்கலிங்கம் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இவரது உடல் இன்று மாலை பொறையாறில் அடக்கம் செய்யப்பட்டது. பொறையாரில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் இறந்தது, பொறையாறு பகுதியில் பொதுமக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.