கட்டுப்பாடை இழந்த மணல் லாரி கடையில் புகுந்ததில் பெண் பலி

Added : நவ 29, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:திருவையாறு அருகே, தறிக்கெட்டு ஓடிய மணல் லாரி, அங்கிருந்த கடைக்குள் புகுந்ததில் பெண் இறந்தார்; டிரைவர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, மருவூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து, பட்டுக்கோட்டை, பள்ளிக்கொண்டானைச் சேர்ந்த வீரமணி, 48, 'டிப்பர்' லாரியில் மணல் ஏற்றி, திருவையாறு வழியாக தஞ்சாவூர் நோக்கிச்
 கட்டுப்பாடை இழந்த மணல் லாரி கடையில் புகுந்ததில் பெண் பலி

தஞ்சாவூர்:திருவையாறு அருகே, தறிக்கெட்டு ஓடிய மணல் லாரி, அங்கிருந்த கடைக்குள் புகுந்ததில் பெண் இறந்தார்; டிரைவர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, மருவூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது.

இங்கிருந்து, பட்டுக்கோட்டை, பள்ளிக்கொண்டானைச் சேர்ந்த வீரமணி, 48, 'டிப்பர்' லாரியில் மணல் ஏற்றி, திருவையாறு வழியாக தஞ்சாவூர் நோக்கிச் சென்றார்.

நடுக்கடை மெயின் ரோட்டில் சென்ற போது, கட்டுப்பாடை இழந்த லாரி, சாலையோரத்தில் இருந்த டயர் கடையில் புகுந்தது.

இதில், நடுக்கடையைச் சேர்ந்த மீரான் மைதீன், 50, முகமது ரபீக், 48, சாகுல் ஹமீது, 45, ரஜியா பேகம், 52, ஈச்சங்குடியைச் சேர்ந்த செல்வம், 38, லாரி டிரைவர் வீரமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.இதில், ரஜியா பேகம் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருவையாறு போலீசார் காயமடைந்தவர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து காரணமாக, திருவையாறு- - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

'பொக்லைன்' இயந்திரத்தால் லாரியை உடைத்து டிரைவர் மீட்கப்பட்டார்.


மாணவி படுகாயம்



தஞ்சாவூர், வைத்தியநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் வைஷ்ணவி, 13; ஆச்சனுார் உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

மருவூர் மணல் குவாரியில் இருந்து வந்த லாரி மோதியதில், வைஷ்ணவி படுகாயமடைந்தார். இதனால், வைத்தியநாதன்பேட்டை கிராம மக்கள், கடையதோப்பு முதன்மைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவையாறு தாசில்தார் பழனியப்பன் பேச்சு நடத்தினார்; போராட்டம் கைவிடப்பட்டது.


11 பேர் காயம்



சென்னையில் இருந்து திருச்சி வழியாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், நேற்று அதிகாலை மணப்பாறை அருகே சென்ற போது, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், டிரைவர், கண்டக்டர் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X