சென்னை:சபரிமலை பக்தர்கள் வசதிக்காக, மஹாராஷ்டிரா மாநிலம் நந்தேடு நகரில் இருந்து, கேரளா மாநிலம் கொல்லம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில், டிசம்பர் மாதம் இயக்கப்படுகிறது.
நந்தேடு - - கொல்லம் ரயில், டிச., 1, 8 மற்றும் 22ம் தேதியும், 2023ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியும் இயக்கப்படுகிறது.
இதேபோல, கொல்லம் -- நந்தேடு சிறப்பு ரயில், டிச., 3, 10 மற்றும் 24ம் தேதியும், ஜன., 7ம் தேதியும் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
சிறப்பு கட்டண ரயில்
நந்தேடு - -கொல்லம் சிறப்பு கட்டண ரயில், டிச., 29ம் தேதி இயக்கப்படுகிறது. கொல்லம் - நந்தேடு சிறப்பு கட்டண ரயில், டிச., 31ல் இயக்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம், ஆதிலாபாதில் இருந்து, கொல்லம் வரை, டிச., 15ம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து, தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாதிற்கு, டிச., 17ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை நிலையங்களில் நிற்கும்.
நரசாப்பூர் சிறப்பு ரயில்
ஆந்திரா மாநிலம் நரசாப்பூரில் இருந்து, கேரளா மாநிலம் கோட்டயத்திற்கு, டிச., 22ல் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
இதேபோல, கோட்டயத்தில் இருந்து நரசாப்பூருக்கு, டிச., 24ல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அவுரங்காபாத் சிறப்பு ரயில்
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாதில் இருந்து கொல்லத்திற்கு, ஜன., 12ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கொல்லத்தில் இருந்து, ஆந்திரா மாநிலம் செகந்திராபாதுக்கு, ஜன., 14ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.