முதல்வர் பற்றி ஆபாச கருத்து பொறியாளருக்கு 17 நாள் சிறை

Added : நவ 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:முதல்வர் ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து பதிவிட்ட, மென்பொறியாளருக்கு, 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர் அரவிந்த், 41; மென்பொறியாளர். இவர், முதல்வர் ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளத்தில், மிகவும் ஆபாசமாக கருத்துக்களை பதவிட்டார்.இவர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்
 முதல்வர் பற்றி ஆபாச கருத்து பொறியாளருக்கு 17 நாள் சிறை

சென்னை:முதல்வர் ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து பதிவிட்ட, மென்பொறியாளருக்கு, 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர் அரவிந்த், 41; மென்பொறியாளர். இவர், முதல்வர் ஸ்டாலின் குறித்து, சமூக வலைதளத்தில், மிகவும் ஆபாசமாக கருத்துக்களை பதவிட்டார்.

இவர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அக்., 12ல், வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து, அரவிந்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், 15 நாட்களுக்குள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அரவிந்துக்கு, 17 நாட்கள் சிறை தண்டனை, 6,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கிரிஜா ராணி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

Myk -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202207:31:12 IST Report Abuse
Myk திருட்டு தி.மு.க... சைதை சாதிக்க கண்டிக்க துப்பில்லாத அரசு!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X