சென்னை:திருச்சி நகர்ப்புற திட்ட பகுதியில், 129 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், இரண்டாம் நிலை நகரங்களில், நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதன்படி, 804.53 சதுர கி.மீ., பரப்பளவு, திருச்சி நகர்ப்புற வளர்ச்சி திட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், லால்குடி, மணச்சநல்லுார், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து தாலுகாக்களுக்கு உட்பட்ட, 129 வருவாய் கிராமங்கள் சேர்க்கப்படுகின்றன.
இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது.