போலீஸ் பாதுகாப்பு கருவிகள் செயல்படாதது வெட்ட வெளிச்சம்!

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி நடந்துள்ளதும், போலீஸ் பாதுகாப்பு கருவிகள் செயல்படாததும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பிரதமரின் சென்னை வருகையின்போது, போலீஸ் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக, கவர்னரிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் உண்மை என்பதை உறுதிப்படுத்தும், உளவுத் துறை கடிதம் சிக்கியுள்ளது.தமிழக காவல் துறை
போலீஸ் பாதுகாப்பு கருவிகள் , வெட்ட வெளிச்சம்!

பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி நடந்துள்ளதும், போலீஸ் பாதுகாப்பு கருவிகள் செயல்படாததும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பிரதமரின் சென்னை வருகையின்போது, போலீஸ் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக, கவர்னரிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் உண்மை என்பதை உறுதிப்படுத்தும், உளவுத் துறை கடிதம் சிக்கியுள்ளது.

தமிழக காவல் துறை உளவுப்பிரிவு கூடுதல் இயக்குனர், அக்., 30ம் தேதி, அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது.

கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற 'செஸ் ஒலிம்பியாட்' நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கருவிகள் திருப்திகரமாகச் செயல்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.


குளறுபடிகள்மேலும், ஒவ்வொரு பாதுகாப்பு பிரிவும் அனுப்பி வரும் மாதாந்திர அறிக்கையில், ஏராளமான குளறுபடிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தக் கருவிகளை பழுது பார்ப்பதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. பயனற்று போகும்போது, அவற்றை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரங்களிலும், 'வெடிகுண்டு கண்டுபிடித்து அகற்றும் குழு'வினரிடம் இருக்கும் கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று, அந்தந்த மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாநகர காவல் துறை ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.


latest tamil newsபரிசீலனைமேலும், தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்ட, இத்தகைய கருவிகளின் பட்டியலும், அதன் தரம் பற்றிய அறிக்கையும் ஏற்கனவே பெறப்பட்டது.

அந்த அறிக்கையோடு, மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் இருந்து பெறப்பட்ட மாதாந்திர அறிக்கைகளை ஒப்பீடு செய்தபோது, அதன் தரம் மற்றும் விபரங்களில் வேறுபாடு காணப்பட்டது.

வெடிகுண்டு கண்டுபிடித்து அகற்றும் குழுவினர் அளித்த விபரங்களை பரிசீலனை செய்தபோது, பின்வரும் அம்சங்கள் தெரிய வந்தன:

பல கருவிகள், அதன் பயன் காலத்தைக் கடந்து விட்டன; அதாவது காலாவதியாகி விட்டன
அந்தக் கருவிகளைப் பராமரிப்பதற்கான பரிந்துரைகள், எந்த குழுவில் இருந்தும் பெறப்படவில்லைஎந்தக் கருவியும் ஏ.எம்.சி., என்று சொல்லப்படும் ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இல்லைஇதுவரை எந்தக் கருவியும் பயன்பாட்டுக் காலத்தைக் கடந்து விட்டதாகச் சொல்லி, அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் கிடைக்கப் பெறவில்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


திணறும் நிலைஇது தவிர, இந்தப் பாதுகாப்பு கருவிகளைப் பராமரித்து, பாதுகாப்பது தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும், அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கருவிகள் செயல்படாமல் போனால், கொடுந்தகவல்கள், ஆபத்தான தகவல்களை முன்கூட்டியே அறிய முடியாமல் போவது, குண்டுகள் இருந்தால் கண்டுபிடிக்க முடியாமல் போவது உட்பட, அடிப்படையிலேயே ஆபத்தான விஷயங்களைக் கையாள முடியாமல் திணறும் நிலை ஏற்படும். இந்த நிலைக்கே இப்போது, தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளதாக கொள்ளலாம்.

'நாங்கள் சொன்னால் தவறா?'

இது குறித்து, அண்ணாமலை கூறியதாவது:மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் மாநகர போலீஸ் ஆணையர்களுக்கு, உளவு பிரிவு ஏ.டி.ஜி.பி., அக்., 30ல் கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்ள விபரங்கள் அனைத்தும் ஆபத்தானவை. இதை முன்கூட்டியே உணர்ந்து தான், அக்., 30ல், பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜைக்கு, பாதுகாப்பு காரணங்களை காட்டி, பிரதமர் வருகையை தமிழக அரசு தடுத்தது.அதை வெளியே சொன்ன காரணத்துக்காக, எங்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் நிர்மல்குமார் மீது வழக்கு போட்டு, போலீசார் தொந்தரவு கொடுக்கின்றனர். இப்போது, அதை உறுதி செய்வதுபோல, ஏ.டி.ஜி.பி., கடிதம் உள்ளது. நாங்கள் அதை சொன்னால் தவறு; அதையே, அவர்கள் சொன்னால் சரியா? என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். பாதுகாப்பு விஷயம் உச்சபட்ச குறைபாட்டோடு இருப்பதை, அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த லட்சணத்தில் தான், முதல்வருக்கும் பாதுகாப்பு வழங்குகின்றனர். அதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (36)

sankar - சென்னை,இந்தியா
30-நவ-202221:48:48 IST Report Abuse
sankar அது சரி அண்ணாமல, ஆட்டுத் தாடியைப் பார்க்கப் போனியே. அப்படியே, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கும் நல்ல சட்டத்துஈகு ஏன்யா அப்ரூவல் தரலன்னு கேட்டியா? வாய் ஜாலம் மாத்திரம் இருக்குதே.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
30-நவ-202221:11:30 IST Report Abuse
r.sundaram //இதே லட்சணத்தில்தான் முதல்வருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது// இதை ஸ்டாலின் புரிந்து கொள்வாரா? இல்லை ஏதாவது நடந்தால்தான் புரிந்து கொள்வாரா? திருட்டு முட்டாள் கழகம் என்று அந்தக்காலத்தில் சொன்னது உண்மையாகி விடுமோ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-நவ-202219:08:10 IST Report Abuse
Ramesh Sargam பிரதமர் பாதுகாப்பு சரியாக ஏட்படுத்திக்கொடுக்காததற்கு மாநில DGP Shylendra Babu அவர்களை பதவி நீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X