கோவை:அண்ணா பல்கலை 'ஜோன் 11' கல்லுாரிகளுக்கு இடையேயான மாணவர் வாலிபால் போட்டியில் கே.ஜி.ஐ.எஸ்.எல்., மற்றும் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணிகள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
அண்ணா பல்கலைக்குட்பட்ட ஜோன் 11 மாணவர்கள் வாலிபால் போட்டி கே.ஜி., கல்லுாரி சார்பில் நடந்தது.போட்டியில் 11வது மண்டலத்துக்குட்பட்ட கல்லுாரிகளில் இருந்து 15 அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
நேற்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் கே.ஜி., கல்லுாரி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் குமரகுரு கல்லுாரி அணியையும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 2 - 1 என்ற செட் கணக்கில் கிரைஸ்ட் தி கிங் கல்லுாரி அணியையும் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறின.