திருவாடானை : மங்களக்குடி சாலை ஓரங்களில் மாடுகள் கட்டபட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
திருவாடானையில் இருந்து மங்களக்குடி செல்லும் சாலை ஓரங்களில் மாடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சாலை வழியாக ஆண்டாவூரணி, தேவகோட்டை, என்.மங்கலம், அடுத்தகுடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதால் தினமும் அதிகமான போக்குவரத்து காணப்படும்.
அஞ்சுகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாலை ஓரங்களில் மாடுகளை கட்டியிருப்பதால் சாலையின் குறுக்கே படுத்து ஓய்வெடுக்கின்றன.
இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மாடு உரிமையாளர்கள் மாடுகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.