திருப்பூர்:சிறுபான்மையினருக்கு, தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், டாம்கோ விராசாட், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம், தாலுகா அளவில் நாளை முதல் நடைபெற உள்ளன.
திருப்பூர் வடக்கு தாலுகா பகுதிகளுக்கு, நகர கூட்டுறவு வங்கியிலும், திருப்பூர் தெற்கு தாலுகா பகுதிக்கு, கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் நாளை (1ம் தேதி) கடன் மேளா நடக்கிறது.
வரும் 2ம் தேதி, அவிநாசி, ராக்கியாபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஊத்துக்குளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடக்கிறது. பல்லடம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம்தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வரும் 5ம் தேதி.
தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் தாலுகாவுக்கு கணியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வரும் 6ம் தேதி முகாம் நடக்கிறது. காலை, 10:30முதல் மாலை, 4:00 மணி வரை இம்முகாம் நடைபெறும்.
முகாமில், புதிய தொழில் துவங்க, தொழில் விரிவாக்கத்துக்கான கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும், 18 வயது பூர்த்தி அடைந்த மற்றும் 60 வயதுக்கு உட்பட்ட சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்; கிராமங்களில் வசிப்போர் ஆண்டுவருமானம், 98 ஆயிரம், நகர்ப்புறங்களில் வசிப்போர், 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் உள்பட வங்கிகள் கோரும் இதர ஆவணங்களையும், கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, 0421 - 2999130 என்கிற எண்ணில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.