அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்துக்குள் நுழைந்த பாகிஸ்தானின் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை, எல்லைப் பாதுகாப்பு படையின் வீராங்கனையர் பிரீத்தி, பாக்யஸ்ரீ ஆகியோர் சுட்டு வீழ்த்தினர். இதில் இருந்த 3.11 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சாஹர்பூர் கிராமத்தில், எல்லைப் பாதுகாப்பு படையின் வீராங்கனையர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நள்ளிரவில் பாகிஸ்தானில் இருந்து நம் எல்லைக்குள் பறந்து வந்த ட்ரோனை வீராங்கனையர் பிரீத்தி மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோர் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.
![]()
|
இதில் இருந்த 3.11 கிலோ போதைப் பொருளை கைப்பற்றினர்.இதையடுத்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த எல்லைப் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., பிரபாகர் ஜோஷி, வீராங்கனையர் இருவரையும் பாராட்டினார்.
முன்னதாக, வாடை சீமா எல்லை அருகே, பாக்.,கில் இருந்து வந்த மற்றொரு ட்ரோனை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் அந்த ட்ரோன் தப்பி, பாக்., எல்லைக்குள் சென்று மறைந்தது.
இதேபோல், 25ம் தேதி அமிர்தசரசில் சர்வதேச எல்லைப் பகுதியை தாண்டி வந்த பாகிஸ்தானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.