திருப்பூர்:வெள்ளகோவிலில், பட்டியில் அடைத்து வைத்திருந்த, 11 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருப்பூரை அடுத்த வெள்ளகோவில், வீரசோழபுரத்தை சேர்ந்தவர் சக்திவடிவேல், 47; விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக, 80 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மேய்ச்சலை முடித்து ஆடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்தனர். நேற்று காலை வழக்கம் போல் பட்டிக்கு சென்றார். 80 ஆடுகளில், 11 ஆடுகள் காணாமல் போயிருந்தது தெரிந்தது.
பட்டியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகளை வெட்டி விட்டு, மர்ம நபர்கள், 11 ஆடுகளை திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.