திருப்பூர்:திருப்பூரிலுள்ள சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
கூடைப்பந்து போட்டியை பள்ளி முதல்வர் ெஹப்சிபாபால், கால்பந்து போட்டியை தி ேஹாம் பள்ளி முதல்வர் ராஜ்குமார் துவக்கி வைத்தனர். இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 600 பேர் பங்கேற்றனர். 14 வயது பிரிவு மாணவர் கால்பந்து போட்டியில் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி முதலிடமும், புனித ஜோசப் பள்ளி இரண்டாமிடம், மூணாறு கால்பந்து குழு மூன்றாமிடம் பெற்றது.
மாணவியர் கூடைப்பந்து போட்டியில், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் முதலிடம், ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, இன்பான்ட் ஜீசஸ் பள்ளி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடம். இரண்டாம் நாள் நடந்த, 17 வயது பிரிவு மாணவர் கால்பந்து போட்டியில், எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் முதலிடம், இன்பான்ட் ஜீசஸ் பள்ளி இரண்டாமிடம், பல்லடம் அகரம் கால்பந்து குழு மூன்றாமிடம்.
மாணவர் கூடைப்பந்து போட்டியில், காரமடை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் முதலிடம், அமேசிங் விளையாட்டுக்குழு இரண்டாமிடம், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சக்திதேவி, சென்சுரி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ெஹப்சிபாபால், தி ேஹாம் பள்ளியின் முதல்வர் ராஜ்குமார் கோப்பை மற்றும் பதக்கம் வழங்கினர்.