மும்பை இந்திய விளம்பர ஏஜன்சிகள் சங்கத்தின் 2022 - 23ம் ஆண்டுக்கான தலைவராக, 'குரூப் எம் மீடியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏ.ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விளம்பர ஏஜன்சிகள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடியது.
அப்போது, 2022 - 23ம் ஆண்டுக்கான சங்க தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், 'குரூப் எம் மீடியா' நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹவாஸ்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராணா பரூவா, துணைத் தலைவராக தேர்வானார்.
விஷன்தாஸ் ஹர்தாசனி, குணால் லாலானி, ரோஹன் மேத்தா, சந்திரமவுலி முத்து, ஸ்ரீதர் ராமசுப்ரமணியன், சசிதர் சின்ஹா, கே.ஸ்ரீனிவாஸ், விவேக் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக தேர்வாகினர்.
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரசாந்த் குமார், 'பெப்சி, தி ஹிந்து, மெக்கேன் எரிக்ஸன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் விளம்பர பிரிவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.