திருப்பூர்:வரத்து உயர்ந்ததால், செவ்வந்தி பூ விலை வெகுவாக குறைந்துள்ளது. கிலோ, 40 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது.
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை பண்டிகையின் போது கிராக்கி காரணமாக செவ்வந்தி விலை அதிகரித்து இருக்கும். பண்டிகை நாளில் ஒரு கிலோ, 250 முதல், 400 வரை விலை வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்வர்.
தற்போது, செவ்வந்தியின் விலை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த வாரம் கிலோ, 100 ரூபாய் இருந்தது. நேற்று மேலும் விலை குறைந்து கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது. பூ மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான கடைகளில் செவ்வந்தி பூக்களை காண முடிந்தது. அதே நேரம், பனியால் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், மல்லிகை வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிலோ, ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ, நேற்று கிலோ, 1,200 ரூபாய், 250 கிராம், 300 ரூபாய்க்கு விற்றது.
குறைந்தளவு வியாபாரிகளே மல்லிகை பூக்களை விற்பனை செய்தனர்.