திருப்பூர்:திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.என்.கே., புரத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி, 55. எஸ்.வி., காலனியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்ற, இருவர் போதை மாத்திரை கேட்டனர்.
கடையில் இருந்த பாலதண்டாயுதபாணி, இல்லை என்று சொல்லி கடையை பூட்ட முயன்றார். கடையை பூட்ட விடாமல் தடுத்து, போதை மாத்திரை வழங்கினால் தான், வெளியே விடுவோம் என்று கூறி தகராறு செய்தனர்.
இதனால், அவர், தனது நண்பர் கனகராஜூக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். விரைந்து சென்ற நண்பர் தட்டி கேட்டதற்கு, இருவரும் சேர்ந்து, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக, திருப்பூர் ராம்நகரை சேர்ந்த மனோஜ்குமார், 27, கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த பிபின், 23 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.