ராமேஸ்வரம்:குஜராத்திலிருந்து 6000 கி.மீ., மூன்று சக்கர தள்ளுவண்டியில் யாத்திரையை துவக்கிய முதிய தம்பதி நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.
குஜராத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியரான தேவ் உபாத்யா 73. இவரது மனைவி சரோஜ் உபாத்யா 68. இருவரும் புனித யாத்திரை பயணமாக ஜுன் 10ல் மூன்று சக்கர வண்டியில் குஜராத்தில் இருந்து புறப்பட்டனர்.
ஹரித்துவாரில் புனித நீராடி தரிசனம் செய்து விட்டு காசி, ம.பி., மகாராஷ்டிரா மாநிலங்களிலுள்ள புனித தலங்களை தரிசித்து விட்டு நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். பின், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட தம்பதி ஆந்திரா, ஒடிசா வழியாக குஜராத் செல்ல திட்டமிட்டுள்ளனர். தினமும் 25 கி.மீ., பயணித்து இதுவரை 6000 கி.மீ., கடந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.