கவர்னரை நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Updated : நவ 30, 2022 | Added : நவ 30, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை :தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்பதற்கு, அவரிடம் விளக்கம் கோரும்படி, மனுவில் கூறப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரைச் சேர்ந்த எம்.கண்ணதாசன் என்பவர் தாக்கல் செய்த மனு:புதுச்சேரியில் உள்ள, 'ஆரோவில் பவுண்டேஷன்' நிர்வாக குழு தலைவராக, தமிழக
கவர்னர், நீக்கம் ,ஐகோர்ட், வழக்கு

சென்னை :தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்பதற்கு, அவரிடம் விளக்கம் கோரும்படி, மனுவில் கூறப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரைச் சேர்ந்த எம்.கண்ணதாசன் என்பவர் தாக்கல் செய்த மனு:

புதுச்சேரியில் உள்ள, 'ஆரோவில் பவுண்டேஷன்' நிர்வாக குழு தலைவராக, தமிழக கவர்னர் ரவியை, 2021 அக்டோபரில் மத்திய அரசு நியமித்துள்ளது. ஆரோவில் அமைப்பு சட்டப்படி, முழு நேரத் தலைவராக அவர் இயங்குகிறார்.


latest tamil news


இந்தப் பதவிக்கு, சம்பளம் மற்றும் விடுமுறை, பென்ஷன், பி.எப்., என இதர சலுகைகள் உண்டு. அரசியலமைப்பு சட்டத்தின்படி, கவர்னர் வேறு ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது.

சம்பளம் மற்றும் சலுகைகள் பெற உரிமை உள்ள பதவியை கவர்னர் ஏற்றுள்ளதால், அவருக்கு தகுதியிழப்பு ஏற்படுகிறது.



கவர்னராக பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. தற்போது, கவர்னராக அவர் பதவி வகிப்பது செல்லாது. ஆரோவில் அமைப்பு சட்டப்பூர்வமானது; தனிப்பட்ட அமைப்பு அல்ல. அரசியலமைப்பு சட்டப்படி, கவர்னர் ரவி செயல்பட வேண்டும். அவர் எடுத்த உறுதிமொழியை மீறியுள்ளார். எனவே, எந்த அடிப்படையில் கவர்னராக பதவி வகிக்கிறார் என்பதற்கு, அவரிடம் விளக்கம் கோர வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (14)

GMM - KA,இந்தியா
30-நவ-202206:41:59 IST Report Abuse
GMM ஆரோவில் நிர்வாக குழு தலைவர். தமிழக கவர்னர். மனு தலைவர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறாமல், கவர்னர் பதவி விலக மனு தாக்கல் நோக்கம் என்ன? உள்நோக்க மனு நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். வேண்டும். கவர்னர் நியமனம் ஜனாதிபதி மூலம். அவர் அனுமதி இல்லாமல் வழக்கை அனுமதிப்பது சரியா? நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பதவி கவர்னர் பதவி. போலீசார், மனித உரிமை, வருவாய் வட்டாட்சியர்.. போன்றவர்களும் ஒரு கடிதம் பெற்று கவர்னருக்கு சம்மன் அனுப்பி, தங்கள் அதிகாரத்தை காட்ட முடியாதா? நிலை தடுமாறும் தீ
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
30-நவ-202207:49:24 IST Report Abuse
Dharmavaanதீம்கா ஆதரவு நீதிகள் முறைகூட தெரியாது. ஆளுநரை கோர்ட் விசாரிக்க முடியுமா...
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
30-நவ-202208:43:18 IST Report Abuse
Dharmavaanஅரசை விட மேலதிகாரம் படைத்ததா கோர்ட் கேட்பாரில்லை. இந்த வரம்பு மீறல் மோடி வந்த பிறகே அதிகம்.இடது சாரி நீதிகளால்....
Rate this:
Cancel
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202205:22:40 IST Report Abuse
Shiva அப்படி என்றல் உதயநிதி எப்போ பதவி விளக்குவார். அவர் Mia மற்றும் ரெட ஜியன்ட் முதலாளி
Rate this:
Cancel
. - ,
30-நவ-202204:52:26 IST Report Abuse
. அந்த வக்கீல் பய ஏதாவது வட்டம் சதுரம் முக்கோண கட்சி பதவிக்கு தொங்குறானா இருக்கும்-அப்படியே அவர் கௌரவ பதவி வகித்தாலும் பணபலன்களை வேண்டாமென முடிதிருந்தால் மனு தள்ளுபடியாகி விடுமே-கேவலமான பிச்சைக்காரனுக அதிகம்.தி மு க வில தான் இருப்பானுக-எம்பிக்கு அளிக்கப்பட்ட இலவச ரயில் பயண பாசை வருடத்தில் 365 நாளும் பயன்படுத்திய ஒரே எம்மி திமு க காரனே-செ. குப்புச்சாமி அவன் பெயர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X