ராமநாதபுரம்:தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கவுன்சிலிங் முடிந்து புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு நாளை(டிச.1) முதல்வகுப்புகள் துவங்குகிறது. புதிய மாணவர்கள் ஆயத்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 4000 மாணவர்களுக்கும் மேல் மருத்துவ கவுன்சிலிங் முடித்து கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர். இவர்களுக்கு நாளை முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கி இரண்டாண்டுகள் ஆகிறது. இங்கு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 100பேரும், மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 50பேரும் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான முன்னெடுப்பு ஆயத்த வகுப்புகள் நவ.15ல் துவங்கியது. முதலாம் ஆண்டு மருத்துவவகுப்புகள் அனைத்தும் நாளை முறையாக துவங்குகிறது.இதையடுத்துபுதிதாக சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளுக்குநேற்று சென்றனர்.
ராமநாதபுரத்தில் மருத்துவமனையின் பல்வேறு துறைகளுக்கும் சென்று பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர். மருத்துவ மாணவர்களுக்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.