திருக்கோவிலுார்:மணலுார்பேட்டை பேரூராட்சி தி.மு.க., பெண் கவுன்சிலர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன் மனைவி லதா, 34; பேரூராட்சி, மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.
இவர், கடந்த 26ம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ள நிலையில், அன்று காலை 7:30 மணிக்கு பிறகும் அவரது படுக்கை அறை கதவு திறக்கப்படவில்லை.
இதனால், அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது, லதா துாக்கில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
இது குறித்து அவரது தந்தை சாமிக்கண்ணு கொடுத்த புகாரின்படி, மணலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.