சென்னை:தமிழகத்தில் உள்ள தொன்மையான 138 கோவில்களில் திருப்பணிகளை துவக்க மாநில வல்லுநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில் மாநில வல்லுநர் குழுவின் 46வது கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் கெங்கராம் பாளையம் கங்கை முத்து மாரியம்மன்; சங்கராபுரம் ராஜநாராயண பெருமாள்; திருவண்ணாமலை மாவட்டம் சந்திர லிங்கம்; கடலுார் மாவட்டம் உடையார்குடி அனந்தீஸ்வரர்; சிவகங்ககை மாவட்டம் நரியனேந்தல் முத்தையா சுவாமி கோவில் உள்ளிட்ட 138 கோவில்களில் திருப்பணிகள் தொடங்ககூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் திருப்பணிகள் துவங்க உள்ளது.இக்கூட்டத்தில் அறநிலையத்துறை தலைமையிட இணைக் கமிஷனர் சுதர்சன் ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.