சென்னை:தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 28 மாவட்டங்களில் தொற்று பதிவாகவில்லை.
தமிழகத்தில் 5190 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னை செங்கல்பட்டில் தலா நான்கு பேர்; கோவையில் மூன்று பேர்; கன்னியாகுமரியில் இரண்டு பேர்; காஞ்சிபுரம் கரூர் சேலம் சிவகங்கை துாத்துக்குடி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 19 பேருக்கு தொற்று உறுதியானது.
மாநிலத்தில் 10 மாவட்டங்களில் தொற்று பதிவான நிலையில் 28 மாவட்டங்களில் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை.
சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 43 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 161 பேர் உட்பட 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்னர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.