அன்னுார்:அன்னுாரில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
கோவையில் கடந்த, 1997ம் ஆண்டு நவ., 29ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியாகினர். இந்த சம்பவத்தின் நினைவு நாள் என்பதால், நேற்று அன்னுாரில், கோவை சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் போலீஸ் எஸ்.ஐ., தலைமையில் போலீசார், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சோதனை நடத்தினர்.
சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 'வருகிற டிச., 6ம் தேதி வரை வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெறும்,' என போலீசார் தெரிவித்தனர்.