அன்னுார்:தொழில் பூங்காவுக்கான அரசாணையை வாபஸ் பெற கோரி, பெண் விவசாயிகள் இருவர் கோவைக்கு நடை பயணம் சென்றனர்.
அன்னுார் தாலுகாவில், நான்கு ஊராட்சிகளிலும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளிலும், 3,864 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்த அரசு ஆணையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவைக்கு நடைபயணமாக சென்று கலெக்டரிடம் மனு அளிக்க பெண் விவசாயிகள் முடிவு செய்தனர்.
அக்கரை செங்கப்பள்ளியை சேர்ந்த பானு ரமேஷ், கஞ்சப்பள்ளியைச் சேர்ந்த பிரபாவதி சுரேஷ் ஆகிய இருவரும், நேற்று மாலை அன்னுார் பாத விநாயகர் கோவிலில் இருந்து நடைபயணமாக கோவைக்கு புறப்பட்டு சென்றனர். இருவரையும் வழி அனுப்பும் நிகழ்ச்சியில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் மகாலட்சுமி, வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.