பெ.நா.பாளையம்:கோவை கவுண்டம்பாளையத்தில், தி.மு.க., பிரமுகர் வெட்ட முயன்ற மரத்தை இயற்கை ஆர்வலர் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தினார்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் -- இடையர்பாளையம் ரோட்டில் பி அண்ட் டி காலனி செல்லும் வழியில், 20 ஆண்டுகளான துாங்கு வாகை மரம் உள்ளது.
நன்கு வளர்ந்த மரத்தின் கிளைகளை, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தேவராஜ் ஆட்களை வைத்து வெட்டினார். தடுக்க வந்தவர்களிடம் வி.ஏ.ஓ., அனுமதி பெற்று மரம் வெட்டப்படுவதாக கூறினார்.
தகவல் அறிந்த, கோவை மாவட்ட பசுமை குழு உறுப்பினர் சையத், உடனடியாக மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் மரத்தின் பெரும் பகுதி காப்பாற்றப்பட்டது. இதுகுறித்து, சையத் கூறுகையில்," கோவை மாவட்ட கலெக்டரின் தலைமையில், மாவட்ட பசுமை குழு செயல்பட்டு வருகிறது.
பொது இடத்தில் நன்கு வளர்ந்த மரம் வெட்டி அகற்றவேண்டும் என்றால், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோரின் உரிய அனுமதி வேண்டும். மரத்தால் அப்பகுதியில் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே வெட்ட இயலும்.
ஒரு சிலர் தங்களுடைய சுய லாபத்துக்காக மரங்களை வெட்டி அகற்றும் போக்கு நிலவுகிறது. இச்செயலில் ஈடுபடுவோர்குறித்து போலீசில் புகார் செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
Advertisement