பெங்களூரு,: பெங்களூரில், 'ரேபிடோ' பைக் டாக்சியில் வந்த கேரள இளம்பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பீஹாரை சேர்ந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் பெங்களூரு பி.டி.எம்., லே - அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில், கேரளாவை சேர்ந்த, 22 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார். கடந்த 24ம் தேதி பணி முடிந்து, அதே பகுதியில் உள்ள தன் நண்பர் வீட்டுக்கு சென்று, மது அருந்தியுள்ளார்.
![]()
|
அங்கிருந்து, நள்ளிரவில் எலக்ட்ரானிக் சிட்டியின் நீலாத்ரி நகரில் உள்ள தன் அறைக்கு செல்ல, 'ரேபிடோ' பைக் டாக்சி புக் செய்து, வரவழைத்தார். பைக் டிரைவர் சஹாபுதீன், 26, அப்பெண்ணை ஏற்றி சென்றார். வழியில், 'எனக்கு சிகரெட் வேண்டும்; கடையில் வாங்கி வா' என்று டிரைவரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.
கையில் பணம் இல்லாததால், தன் நண்பர் அர்பத் ஷெரீப், 24, என்பவரை தொடர்பு கொண்டு, 'ஆன்லைன்' மூலம் பணம் அனுப்ப கேட்டுள்ளார்.'இந்த வேளையில் எதற்காக பணம்' என நண்பர் கேட்டதற்கு, விஷயத்தைகூறியுள்ளார்.அப்போது, 'நம் அறைக்கு இளம்பெண்ணை அழைத்து வா' என ஷெரீப் கூறியுள்ளார்.இதன்படி, போதையில் இருந்த பெண்ணை அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு தன் தோழியுடன், ஷெரீப் காத்திருந்தார். தோழி முன்னிலையிலேயே இளம்பெண்ணை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின், மூவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.நினைவு திரும்பிய இளம்பெண், தனக்கு நேர்ந்த கதியை நினைத்து கதறி அழுதுள்ளார்.
யாரிடமும் கூறாமல் தனது அறைக்கு சென்றுள்ளார். மறுநாள், வயிறு வலிப்பதாக அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர்களிடம் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் ஆலோசனைப்படி, எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து, சஹாபுதீன், ஷெரீப் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவரும் பீஹாரை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களுடன் இருந்த தோழி குறித்து விசாரணை நடக்கிறது.