அன்னுார்:வடக்கலுாரில் வீதியின் நடுவே, வழிந்தோடும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடக்கலுாரில், கருப்பராயன் கோவில் பின்புறம், 50 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில், வடிகால் வசதி இல்லாமல், வீதியின் நடுவே, கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து வடக்கலுார் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை நேரில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால், அன்னுார் ஒன்றிய அலுவலகம் மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்துள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.