புதுடில்லி :நடப்பு ஆண்டில், உலக பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், இந்திய பணக்காரர்கள் அதிக வளர்ச்சியை கண்டுள்ளனர். 'போர்ப்ஸ்' நிறுவனம் 2022ம் ஆண்டுக்கான 'டாப் - 100' இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஆண்டைவிட F2.05 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 65.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது.இதில், 'டாப் - 10' பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 31.57 லட்சம் கோடி ரூபாய்.
![]()
|
இந்திய பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில், கவுதம் அதானி உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 12.30 லட்சம் கோடி ரூபாய். உலகளவில் இவர் மூன்றாவது பெரிய பணக்காரராகவும் உள்ளார்.இந்தியாவின் டாப் - 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் 30 சதவீதம், கவுதம் அதானியுடையது.அதானிக்கு அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 7.22 லட்சம் கோடி ரூபாய். இருப்பினும், இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட, 5 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் 'டிமார்ட்' நிறுவனத்தின் ராதாகிஷன் தமானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2.26 லட்சம் கோடி ரூபாய்.
நான்காவது இடத்தில் 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவனத்தின் சைரஸ் உள்ளார்.டாப் - 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே பெண் 'ஜிண்டால்' குழுமத்தைச் சேர்ந்த சாவித்ரி ஜிண்டால் மட்டுமே. இவரது சொத்து மதிப்பு 1.34 லட்சம் கோடி ரூபாய்.இந்த ஆண்டின் பட்டியலில், மொத்தம் 9 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர் என, போர்ப்ஸ் தெரிவித்துஉள்ளது.