புதுடில்லி:சிவசேனா கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கை அடுத்த மாதம் 12ல் தேர்தல் ஆணையம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கிறது.இங்கு ஆட்சியில் இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி துாக்கினார்.
அவருக்கு சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் ஆதரவு அளித்தனர். இதையடுத்து உத்தவ் பதவி விலக பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷண்டே புதிய முதல்வரானார். இதையடுத்து சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில் - அம்பு சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின. இதை தொடர்ந்து கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம்முடக்கியது.
![]()
|
உரிமை கோருவது தொடர்பாக இருதரப்பும் தங்களிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 12ல் துவங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் மேற்கொண்டு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியது இருந்தால் டிச.9க்குள் தாக்கல் செய்யுமாறு இருதரப்புக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.