வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2019ல் மத்திய அரசு அறிவித்த குடியுரிமை திருத்த சட்டம் தமிழர்களுக்கு எதிரானதாக உள்ளது; இது சட்டவிரோதமானது.

பல ஆண்டுகளாக தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து இந்த சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மத அடிப்படையில் குடியுரிமை அளிப்பது என்பது புதிய நடைமுறையாக உள்ளது; இது, மதச்சார்பற்ற கொள்கையை சிதைத்து விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.