'வி.சி., கட்சியை தடை செய்து, அதன் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் சிவசேனா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் தமிழக கவர்னருக்கு சிவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தேசத்தை பாதுகாக்கும் ஒப்பற்ற பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

'தனி தமிழ்நாடு' என்ற பேச்சை, அக்கட்சியின் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான திருமாவளவன் பேசி வருகிறார். தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக பேசி வரும் அந்த கட்சியை தடை செய்து, அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழிக்கு புறம்பாக செயல்படும் திருமாவளவனை, வரும் லோக்சபா கூட்ட தொடரில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -