திருப்பூர்: இமயமலை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் காணப்படும் நீலவால் பஞ்சுருட்டான் பறவை திருப்பூருக்கு வலசை வந்துள்ளது.

திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:
நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள், பெரிய அளவு சிட்டுக்குருவியை போல் இருக்கும். தேனீ, தட்டான் பூச்சி போன்ற சிறு பூச்சியினங்களை மட்டுமே இவை உட்கொள்ளும். உறைபனியில் இருந்து தற்காத்துக்கொள்ள, முதல் ஆறு மாதங்கள் உடலில் கொழுப்பை சேர்த்து தயார்படுத்தும்.
அதன்பின், நெடுந்தொலைவு பயணத்தை துவக்கி திருப்பூர் வந்து சேர்கின்றன. இங்கு, ஓய்வெடுத்து, இளைப்பாறிவிட்டு, மார்ச் கடைசி வாரத்தில் மீண்டும் தாயகத்துக்கே திரும்பி செல்லும். அங்கு சென்ற பின், இனப்பெருக்கம் செய்யும்.
இவ்வாறு, அவர் கூறினார்.