இந்திய பயனர்களின் 17 லட்சம் வீடியோக்களை நீக்கிய யு-டியூப்

Updated : நவ 30, 2022 | Added : நவ 30, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: தங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை (பாலிசி) மீறியதாக கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்திய பயனர்கள் பதிவேற்றிய 17 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யு-டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.பிரபல வீடியோ தளமான யு-டியூப், தங்களது பாலிசிகளை மீறி செயல்படும் சேனல்கள், வீடியோக்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல்
YouTube Videos, India, YouTube Policy, யுடியூப், இந்தியா, யுடியூப் வீடியோ, யுடியூப் பாலிசி, Community Norms Violation,

புதுடில்லி: தங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை (பாலிசி) மீறியதாக கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்திய பயனர்கள் பதிவேற்றிய 17 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யு-டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.பிரபல வீடியோ தளமான யு-டியூப், தங்களது பாலிசிகளை மீறி செயல்படும் சேனல்கள், வீடியோக்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) இந்தியாவில் இருந்து பதிவேற்றப்பட்ட 11 லட்சம் வீடியோக்களை நீக்கி இருந்தது.


இந்த நிலையில், மூன்றாம் காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் மட்டும் தங்கள் நிறுவன பாலிசியை மீறியதற்காக இந்திய பயனர்கள் பதிவேற்றிய 17 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியுள்ளதாக யு-டியூப் தெரிவித்துள்ளது.latest tamil news

உலகம் முழுவதும் அதே காலக்கட்டத்தில் 56 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36 சதவீத வீடியோக்கள் ‛ஆட்டோமேட்டிக்' சாப்ட்வேர் மூலமாக ஒருவர் கூட பார்ப்பதற்கு முன்னதாக நீக்கப்பட்டுள்ளதாகவும், 31 சதவீத வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டு 1 முதல் 10 பார்வைகளை தாண்டுவதற்குள் நீக்கப்பட்டுள்ளதாகவும் யு-டியூப் தெரிவித்தது.


அதேபோல், பாலிசிகளை மீறிய 73.7 கோடி கமெண்ட்களையும் நீக்கியுள்ளது. இதில் 99 சதவீத கமெண்ட்கள் ‛ஆட்டோமேட்டிக்' சாப்ட்வேர் மூலமாக நீக்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (9)

30-நவ-202220:48:37 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இந்திய பயனர்கள் பதிவேற்றும் காட்சிகள் குப்பைகள் .......... வீடு பெருக்குவது, துடைப்பது இவற்றைக்கூட வீடியோ எடுத்து போடுகிறார்கள் ....
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
30-நவ-202219:59:14 IST Report Abuse
Mohan ஆமாம். ரொம்ப ந...ல்ல பாலிஸி ..ஹூம்... பாலியல் பலாத்காரம் நாளரு மேனியும் வளர்வதற்கு காரணமாக இருக்கும் ஆ..பாஆ..ச வீடியோக்களை நீக்கினாலே முக்காவாசி பிரச்னைகள் சரியாகும். வித விதமாக...டிஃபரண்ட் டிஃபரண்ட் டா.. வச்சிருக்கிற பாலியல், ஆபாச வீடியோக்களை கருத்து சுதந்திரம் என்ற பொய்யான பெயர் சொல்லி யூடியூப் முழுவதும் நெளிகிற நரகல் பாம்புகளைப் போன்ற சாக்கடை வீடியோக்களை நீக்க துப்பில்லாத நிர்வாகத்திற்க் தலைமை ஏற்றிருக்கும் பெண்ணால் பெண் இனத்துக்கே பெருத்த அவமானம். நாலு சுவர்களுக்குள் நடப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதும் கெடுதல். அதைக்காட்டி இளைஞர்கள் மனதை கெடுத்து தவறு செய்ய தூண்டுவதும்....மகா .. பாவம்.. சமூக சிந்தனை இல்லாத பணத்தாசை கொண்ட , நாத்தம் பிடிச்ச. , பொறப்புணர்வும் இல்லாத மக்கள் விரோத கார்ப்பொரேட் பெருச்சாளிகள். வீழ்க...
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
30-நவ-202218:45:19 IST Report Abuse
தியாகு கட்டுமர திருட்டு திமுகவிற்கு ஒத்து ஊதும் சேனல்களை முடக்கினால் புண்ணியமா போகும். அதை செய்யுங்க எஜமான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X