என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து பிரணாய் ராய், அவரது மனைவி விலகல்: பங்குகளை அதானி வாங்கியதால் முடிவு

Updated : நவ 30, 2022 | Added : நவ 30, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
புதுடில்லி: என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா பதவி விலகி உள்ளனர்.என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக

புதுடில்லி: என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா பதவி விலகி உள்ளனர்.



latest tamil news


என்.டி.டி.வி.யின் 29.18 சதவீதம் அளவிலான பங்குகளை தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் சமீபத்தில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.


அதானி குழுமத்தின் 100 சதவீதம் முழுமையான துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம், என்.டி.டி.வி.க்கு நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களுக்கு உதவியாக இருந்த ஆர்.ஆர்.பி.ஆர். என்ற நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கடந்த ஆகஸ்டில் வாங்கியிருந்தது.



latest tamil news


இந்த ஆர்.ஆர்.பி.ஆர். நிறுவனம், என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதனை, அதானி குழுமம் தன்வசப்படுத்தி இருந்தது.


இதன் தொடர்ச்சியாக, என்.டி.டி.வி.யின் அடுத்த 26 சதவீத பங்குகளையும் விலைக்கு வாங்க அதானி குழுமம் முன்வந்தது. இதனால், என்.டி.டி.வி.யின் 55.18 சதவீத பங்குகள் அந்த குழுமத்திற்கு செல்லும். இது , அந்த குழுமம் என்.டி.டி.வி.யின் உரிமையாளராவதற்கு வழிவகுக்கிறது.


ஆனாலும் என்.டி.டி.வி.யின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர். இப்பொழுது என்.டி.டி.வி இயக்குனர் பதவியில் இருந்து அதன் நிறுனவர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி பதவி விலகி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (28)

g.s,rajan - chennai ,இந்தியா
30-நவ-202221:58:53 IST Report Abuse
g.s,rajan இன்னும் கொஞ்ச நாள்ல அதானி இந்தியாவையே ஒட்டுமொத்தமா ஒரு விலை பேசி வாங்கிடுவார் போல இருக்கு .
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
30-நவ-202221:50:18 IST Report Abuse
வாய்மையே வெல்லும் அம்பானி கூடிய விரைவில் கேடிகளின் தொலைக்காட்சி உரிமையும் பல்லை தட்டி பறித்து கொண்டால் தமிழ்நாடு உருப்படும்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-நவ-202221:49:04 IST Report Abuse
g.s,rajan இன்னும் கொஞ்ச நாள்ல இந்தியாவை ஒட்டுமொத்தமா ஒரு விலை பேசி அதானி வாங்கிவிடுவார் போல இருக்கு . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X