
இன்னமும் காதுகளில் அந்த குழந்தைகளின் சங்கீதம் இனிமையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை தட்சின்சித்ரா கலைக்கூடமும் ,சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவும் இணைந்து ஒரு இசை நிகழ்வை தட்சின்சித்ராவில் நிகழ்த்தினர்.

சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா என்பது ஏ ஆர் ரஹ்மான் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இசைக்குழுவாகும். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இசைத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு இங்கு இலவச இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்களுக்கு இணையாக இசைத்து பாடியதைக் கேட்ட பெற்றோர் உறவினர் நண்பர்கள் கைதட்டி பாராட்டினர்,இளம் குழந்தைகளுக்கான கொண்டாட்டமாகவே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிலும் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடிய ‛தோட்டுக்கடை ஒரத்திலே தோடு ஒன்னாங்க' என்பது போன்ற பல நாட்டுப்புற பாடல்களை பாடி பிரமாதப்படுத்தினர்.

குழுவின் மாணவர்கள் இந்த நிகழ்விற்காக கடினமாக உழைத்துள்ளனர். இது அவர்களின் முதல் பொது இசை நிகழ்ச்சியாகும். வெற்றிகரமாகவும் பாராட்டும்படியும் அமைந்ததில் மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர் இந்த உற்சாகம் அவர்களை அடுத்தடுத்த படிகளில் ஏற்றிச்செல்லும் என்றார் இந்த குழுமத்தின் நடத்துனர் ரமீதா.
தகவல்: நிகழ்ச்சி ஒருங்கிணபை்பாளர் முகிலன் .படங்கள்:ரேகா
-எல்.முருகராஜ்