சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெறுவதால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமையிட ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கடராமன் கூடுதலாக நிர்வாக பிரிவை கவனிப்பார்.
* போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கனிப்பார்.
கோவை மாநகர காவல்துறை துணை கமிஷ்னர் மதிவாணன், போக்குவரத்து பிரிவுக்கும்,
கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை சைபர்கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர்கள் உட்பட மொத்தம் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.