சென்னை: எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது, நான் முதல் நபராக பார்ப்பேன். எம்.ஜி.ஆரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படம் எப்படி இருந்தது என்று கேட்பார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியவதாவது: எம்ஜி ஆர் பெரிய உந்து சக்தி மற்றும் சினிமாவில் சிறந்தவராக விளங்கியவர். இவர் அதிக வருடங்கள் திமுகவில் பணியாற்றியுள்ளார். உடல் வலிமை போன்று மன வலிமையும் முக்கியம். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி. எம்.ஜி. ஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது, நான் முதல் நபராக பார்ப்பேன். எம்.ஜி.ஆரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படம் எப்படி இருந்தது என்று கேட்பார். மாணவராக இருக்கும் போது பள்ளி நிதிக்காக, எம்.ஜி,ஆரை சந்திக்க சத்தியா ஸ்டுடியோவுக்கு வந்துள்ளேன்.
நன்றாக படிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் என்னிடம் உரிமையாக கூறினார். என் மீது அதிக அன்பு கொண்டவர் எம்.ஜி.ஆர். தமிழ் உட்பட 6 மொழிகளை அறிந்தவர் ஜானகி. இவர் 31 திரைப்படங்களில் நடித்துள்ளார். மருதுநாட்டு இளவரசி படத்தில் 3 முதல்வர்களின் பங்களிப்பு இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.